யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா தீவிர நிலை..! 108 பேருக்கு தொற்று, 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவு தொற்றாளர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா தீவிர நிலை..! 108 பேருக்கு தொற்று, 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவு தொற்றாளர்கள்..

யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே 143 பேருக்கு தொற்று உறுதியானது, 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 தொற்றாளர்களும், யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 தொற்றாளர்களும், 

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 தொற்றாளர்களுமாக 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான தொற்றாளர்கள் 

பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் நேற்றய தினம் 108 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும் வவுனியா மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும், முல்லைத்தீவில் 6 தொற்றாளர்களும், கிளிநொச்சியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Radio