எஞ்சாய் எஞ்சாமி பாடல் 25 கோடி முறை பார்த்து சாதனை!!

ஆசிரியர் - Editor II
எஞ்சாய் எஞ்சாமி பாடல் 25 கோடி முறை பார்த்து சாதனை!!

சந்தோஸ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்னும் பாடலின் வீடியோ கடந்த மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. 

பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஸ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை  எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. தற்போது இப்பாடலுக்கு 25 கோடி முரைபார்த்து உள்ளனர்.  

ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Radio