SuperTopAds

யாழ்.கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலையில் வெளியாருக்கு தாரைவார்ப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலையில் வெளியாருக்கு தாரைவார்ப்பு..

யாழ்.கீரிமலை பகுதியில் மக்களின் நிலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலமாக வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது. 

வலி,வடக்கின் பெரும் பகுதி படையினரின் ஆக்கிரபிப்பில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருந்த சமயம் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின்போது கீரமலையில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது. குறித்த மாளிகை அமைக்கப்பட்ட நிலம்  முழுமையாக மறைக்கப்பட்டது, 

இதன் பின்பு மைத்திரிபால சிறிசேனா ஆட்சியில் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக பல நிலங்கள் விடுவித்தமையின் காரணமாக கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு 

ஒரு கிலோ மீற்றர் தூரம் வரையில் விடுவிக்கப்பட்டதனால் இந்த இடம் தொடர்ந்தும் கடற்படையினரின் பராமரிப்பிலேயே உள்ளது.

இதேநேரம் இந்த மாளகையினை வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்குமாறு மைத்திரிபால சிறசேனா முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேரில் அழைத்துச் சென்று 

கோரிக்கை விடுத்தபோது விக்னேஸ்வரனும் மறுத்துவிட்டார். இதனால் தொடர்ந்தும் கடற்படையினரின் பிடியில் உள்ள இந்த மாளிகையினை 

சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் என்னும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக விலைமனு கோரப்பட்டு வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது. 

ஜே/226 நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் 50 ஏக்கர் நிலம் கடற்படையினர் வசம் உள்ளபோதும் 7 ஏக்கர் நிலத்தில் 5 கட்டிடத்தில் குறித்த மாளிகை அமைந்துள்ளது.