திருமணத்துக்கு தயாரான நடிகை அஞ்சலி?
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சலிக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினர்.
இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது.
திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அஞ்சலி தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.