சினபோர்ம் தடுப்பூசி குறித்த அச்சம் தேவையற்றது..! தடுப்பூசி மருந்தில் இருப்பது இதுதான், நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி ராமச்சந்திரன்..

ஆசிரியர் - Editor I

சீன நாட்டின் "சினோவாம்" தடுப்பூசி இறந்த நுண்ணுயிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என யாழ்.போதனா வைத்தியசாலையில் நுண்ணுயிர் வைத்திய நிபுணர் திருமதி ரஜந்தி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படை செயலிழக்கச் செய்யப்பட்ட நுண்ணங்கியை பகுதியாகவோ முழுமையாகவோ உடல்களில் செலுத்தி உடலிலுள்ள ஞாபகக் கலங்களை தூண்டுவதும் அதேவேளை பாதிக்காமலும் இருக்கவேண்டும்.

கொவிட் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் போது சிலர் நுண்ணங்கியின் வெளி உறையினுள்ள பைஸ் புரோட்டினை பயன்படுத்தி மருந்து தயாரிக்கிறார்கள். 

மறுபுறும் இறந்த நுண்ணங்கிகளை பயன்படுத்தி ஊசி மூலம் உடலினுள் செலுத்தி கொவிட் நோய்க்காண பாதுகாப்பு தடுப்பூசியை ஏற்றுகிறார்கள். தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளான ஒஸ்போட் அஸ்ராசெனகா, 

இந்தியாவின் கொவிசில், சீனாவின் சினோபாம், அமெரிக்காவின் பைசர், ஸ்புட்னிக் மற்றும் மொடோனா போன்றன பயன்பாட்டிலுள்ளன. இதில் பைச், மொடொனா தடுப்பூசிகள் கொவிட் 19 நோய்க்கிருமியின் mrni வக்சினாக 

மனித உடலினுள் செலுத்துகிறார்கள். ஸ்புன்னிக், ஒஸ்வோட் அஸ்ராசெனகா தடுப்பூசிகள் அடினோ வைரஸை செலுத்தி மனித உடலினுள் தடுப்பூசியாக ஏற்றப்படுகிறது. சினோபாம் தடுப்பூசியானது 

முழுமையாக செயிழக்கப்பட்ட நுண்ணங்கிகளை மனித உடலில் செலுத்தப்படுகிற நிலையில், இவை அனைத்தும் ஆராய்ச்சிகளின் பின்னே தடுப்பூசிகளாக பரிந்துரைக்கப்பட்டது. 

இவற்றுள் mrni யை செலுத்தும் தடுப்பூசியோ அல்லது வெற்றோட செலுத்தும் தடுப்பூசியோ, இறந்த நுண்ணங்கிகளை தடுப்பூசிகளாக பயன்படுத்துவது தடுப்பூசிகளோ சாதகம் என பார்ப்போம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் mrni பயன்படுத்தி தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை எடுத்துச் செல்லும் வாகன வசதி, களஞ்சியப்படுதல் ஆகியன சாதகம் அல்லாததாகவே காணப்படுகிறது.

ஏனெனில் mrni பயன்படுத்தி தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் -80 வெப்ப நிலையில் களஞ்சியப்படுத்த வேண்டும். அவ்வாறு களஞ்சியப்படுத்துவதற்கு அதிக நிதி செலவாகும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை 

மற்றும் யாழ்.மருத்துவப் பல்கலைக்கழம் ஆகியவற்றில் அதனை களஞ்சிப்படுத்தக் கூடிய உபகரண வசதிகள் மட்டும் காணப்படுகிறது. குறித்த தடுப்பூசியை வாகனங்களில் கொண்டு செல்வதில் பிரச்சினை காணப்படும் நிலையில் 

இலங்கை அரசாங்கம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. அஸ்ராசெனகா தடுப்பூசியை பொறுத்தவரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் சிலருக்கு உடலில் உடனடி மாற்றங்கள் சில கண்டறியப்பட்டுள்ள நிலையில் 

குறித்த தடுப்பூசியானது நீண்டகால பிரச்சினையை ஏற்படுத்தாது. யாழில் செலுத்தப்பட்ட சினோபாம் தடுப்பூசியானது மக்களுக்கு எவ்விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாக எமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை. 

தடுப்பூசிகள் தொடர்பில் இந்த தடுப்பூசி தான் நல்லது அல்லது மற்றய தடுப்பூசி தான் நல்லது என பாராது எல்லாத் தடுப்பூசிகளுமே உலக சுகாதார அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் 

மருத்துவ ஆய்விற்குட்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.ஆகவே மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவற விடாமல் தடுப் பூசிகளை பெற்றுக்கொள்ள முயல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு