பொதுமக்கள் அழைப்பு. அரியாலை உதயபுரத்திற்குள் நுழைந்த அமைச்சர்..! வரிசையில் வந்த அதிகாரிகள், காவலரண் அமைக்கும்படி மக்கள் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் அழைப்பு. அரியாலை உதயபுரத்திற்குள் நுழைந்த அமைச்சர்..! வரிசையில் வந்த அதிகாரிகள், காவலரண் அமைக்கும்படி மக்கள் கோரிக்கை..

யாழ்.அரியாலை - உதயபுரம் பகுதியில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். 

பொதுமக்கள் அழைத்ததை தொடர்ந்தே அமைச்சர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக தொிவருகின்றது. மேற்படி பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு 

இடம்பெற்றுவரும் நிலையில் மணல் கள்ளர்களை கட்டுப்படுத்தக்கோரி மக்கள் அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். 

இதனடிப்படையில், குறித்த பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

சம்மந்தப்பட்ட பிரதேச அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரண்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் 

என அப்பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு