கர்ப்பவதி பெண்கள், பாலுாட்டும் தாய்மார் தடுப்பூசி பெறலாமா? பெண் நோயியல், மகப்பேற்று வைத்திய நிபுணர் அ.சிறீதரன் விளக்கம்..

ஆசிரியர் - Editor I

35 வயது கடந்த கர்ப்பவதி பெண்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். என யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல் வைத்திய நிபுணர் அப்பாத்துரை சிறீதரன் கூறியுள்ளார். 

போதனா வைத்தியசாலையில் யாழ். மருத்துவ சங்கம் ஏற்பாடு நேற்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக பல்வேறு வழிகளில் மக்கள் எங்களைத் தொடர்பு கொண்டு நான் கர்ப்பமாக இருக்கிறேன். எமது இடத்தில் தடுப்பூசி போடப் போகிறார்கள். போடலாமா?எனக் கேட்டனர்.

அத்துடன், தாய்ப்பால் ஊட்டுவோர், அண்மையில் திருமணம் செய்துகொண்டவர்கள், திருமணம் செய்ய உள்ளவர்கள் எனப் பல தரப்பினரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாமா? எனக் கேள்விகளை எழுப்பினர்.

கொரோனா தடுப்பூசிகள் சாதாரண ஒருவரில் எவ்வாறு தொழிற்படுகிறதோ, அதன் செயற்பாட்டுத்திறன் எவ்வாறு இருக்கிறதோ அதே வகையில் தான் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிலும் தொழிற்படும்.

அதன் பாதுகாப்பும் மற்றவர்களைப் போன்றுதான் இருக்கும் என்றும் என்றும் உலக சுகாதார அமைப்பு சொல்லியிருக்கிறது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடலாம் என இலங்கையின் குடும்பநல சுகாதார மேம்பாட்டு மையம் 

இதைப் பற்றி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.கர்ப்பகாலம் என்பது மனிதர்களிடையே 9 மாதமும் 7 நாட்களும் ஆகவே அதை மூன்றாகப் பிரித்திருக்கிறோம் . முதல் 3 மாதம், நடு 3 மாதம், கடைசி 3 மாதம் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. 

 முதல் மூன்று மாதத்தில் தான் ஒரு சிசுவின் எல்லா அங்கங்களும் உருவாகிறது.ஆகவே அந்த மூன்று மாதத்தில் போலிக்கசிற் மாத்திரையைத் தவிர வேறு எதுவும் கொடுப்பதில்லை.

கொரோனா தடுப்பூசி எதுவாக இருந்தாலும் 2 ஆவது அல்லது 3 ஆவது மூன்று காலப் பகுதியில் தான் வழங்குவோம். 12 முதல் 14 வாரங்கள் வரையான கற்பகாலம் முடிந்த பின்பு தடுப்பூசியை வழங்கலாம்.

கர்ப்பிணிப் பெண்களை மற்ற பொது மக்களோடு சேரவிடாது அவர்களுக்கு தனியொரு இடத்தை உருவாக்கி அங்கு அழைத்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 அதற்குரிய தரவுகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் திரட்டி கொண்டு இருக்கிறார்கள் அடுத்து தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களை பொறுத்தவரையில் பாலூட்டிக் கொண்டு இருப்பவர்கள் 

எந்தவித இடையூறுமின்றி தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும். தடுப்பூசி போட்டவர்களும் பாலூட்டுதலை தொடர முடியும். எந்தவிதமான பிரச்சனையும் இல்லை எனவும் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் கூறினார்.

திருமணம் முடிக்க எதிர் பார்த்து இருக்கிறார்கள் அல்லது திருமணம் முடிந்து குழந்தையை எதிர் பார்த்து இருப்பவர்கள் தடுப்பூசி போடலாமா என்பது அடுத்த முக்கியமான கேள்வி. அதற்கு விடை இதுவரை கிடைத்த தகவல்களின்படி 

ந்த எந்தவொரு தடுப்பூசியும் ஆண்களின் விதைகளையோ பெண்களின் சூலகங்களையோ தாக்குவதில்லை. அதனால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பம் இல்லை. 

வர்களின் தொழிற்பாடுகளில் எந்தவித மாற்றமும் வராது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு