SuperTopAds

44 வயதில் 2 ஆவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை!!

ஆசிரியர் - Editor II
44 வயதில் 2 ஆவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை!!

44 வயதாகும் நடிகை ஒருவர், 2 ஆவது திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளதாகவும், தனக்கான மாப்பிள்ளையை தெரிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீவிரமாக பரவி வருகிறது.

தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரேமா. பெங்களூருவை சேர்ந்த இவர், கன்னடத்தில் 70ற்க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல் தெலுங்கிலும் 28ற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை பிரேமா, 2006 ஆம் ஆண்டு ஜீவன் அப்பாச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்தனர். 

நடிகை பிரேமாவுக்கு தற்போது 44 வயது ஆகிறது. இந்த நிலையில், அவர் 2 ஆவது திருமணம் செய்ய தீர்மானித்துள்ளார். தனக்கான மாப்பிள்ளையை தேர்வு செய்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இருப்பினும் மேற்படி தகவலை குறித்த நடிகை பிரேமா உறுதிப்படுத்தவில்லை.