5000 ரூபாய் கொடுப்பனவு இல்லை..! குடும்ப அட்டையில் திகதியிடாமல் 5000 கொடுத்ததாக எழுதிய கனவான்கள். யாழ்.அராலியில் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
5000 ரூபாய் கொடுப்பனவு இல்லை..! குடும்ப அட்டையில் திகதியிடாமல் 5000 கொடுத்ததாக எழுதிய கனவான்கள். யாழ்.அராலியில் மக்கள் போராட்டம்..

யாழ்.சங்கானை பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும், கிராம வேகர் பொய் கூறுவதாகவும் கூறி அராலி மத்தி ஜே/161 கிராமசேவகர் பிரிவு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் அன்றாடம் வேலைக்கு சென்று உழைத்துச் சாப்பிடும் கூலித் தொழிலாளிகள். எமக்கு இதற்கு முதல் புது வருடத்திற்கு கொடுத்த 5,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவில்லை, 

தற்போது வழங்கப்படும் கொரோனா கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. சமுர்த்தி பயனாளிகளுக்கு தான் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது, 

அத்துடன் கொரோனா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. தற்போது வேலைக்கு செல்ல முடியாமல் நாங்களும் கஷ்டத்தின் மத்தியில் தான் வாழ்க்கையை நடாத்துகின்றோம். நாங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வது?

அத்துடன் எங்களது குடும்ப அட்டைகளை சமுர்த்தி மற்றும் கிராம சேவகர் வாங்கி வைத்துவிட்டு நேற்றைய தினம் திருப்பி எங்களிடம் தந்துள்ளனர். அந்த குடும்ப அட்டையில் மேலும் ஒரு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாக 

திகதி போடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எமது கையெழுத்தை ஒத்த கொயெழுத்தும் வைக்கப்பட்டுள்ளது. சிலரது குடும்ப அட்டையில் மேலதிகமாக பதிவு செய்த 5,000 ரூபா பேனாவினால் வெட்டப்பட்டுள்ளது. 

சிலரது குடும்ப அட்டையில் அது வெட்டப்படவில்லை.எங்களது கையெழுத்து போல கையெழுத்து எமது குடும்ப அட்டையில் எவ்வாறு வந்தது என உத்தியோகத்தர்களை நாங்கள் வினவியபோது அது தவறுதலாக நிகழ்ந்துள்ளது என 

பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுகின்றனர். எனவே உரியவர்கள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு