SuperTopAds

பெண்ணொருவருடன் கணவருக்கு கள்ளத்தொடர்பு!! -நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்-

ஆசிரியர் - Editor II
பெண்ணொருவருடன் கணவருக்கு கள்ளத்தொடர்பு!! -நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்-

இந்தி நடிகை நிசா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கள்ளத்தொடர்பு வைத்திருந்த தனது கணவர் தன்னை அடித்து சுவருடன் மோதியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து விசாரணை செய்த பொலிஸார் கரண் மேஹ்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணையில் வெளிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விடயம் தொடர்பில் நிசா ராவல் தெரிவிக்கையில்:- 

நானும், கரண் மேஹ்ராவும் 14 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். எங்களுக்குள் யாருக்கும் தெரியாத பல விடயங்கள் நடந்துள்ளன. கரண் மேஹ்ராவுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அது முதலில் எனக்கு தெரியவில்லை.

எனக்கு தெரியவந்ததும் அவரிடம் நேராகவே கேட்டேன். அதற்கு ஆமாம் என்றார். அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவளோடு உறவு வைத்திருப்பதாகவும் கூறினார். 

இதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். கரண் கள்ளத்தொடர்பை விட்டு விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டால் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன் என்றார்.