யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கலில் பாகுபாடா? சங்கானைக்கான ஒதுக்கீடு 1000, இனி ஊசி இல்லை என கைவிரிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கலில் பாகுபாடா? சங்கானைக்கான ஒதுக்கீடு 1000, இனி ஊசி இல்லை என கைவிரிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் தடுப்பூசி வழங்கலில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு 1000 தடுப்பூசிகள் மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் மேலதிக ஊசிகளை வழங்க வடமாகாண சுகாதாரத் திணைக்களம் மறுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

நாளை பனிப்புலம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகள் இல்லை என சுகாதாரத் திணைக்களம் கைவிரித்துள்ளது. 

வடக்கு சுகாதாரத் திணைக்களத்தின் இச்செயற்பாடு குறித்து வலி.மேற்கு பிரதேச மக்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளில் 50,000 வரையான சனத்தொகையைக் கொண்ட 

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு எத்தனை ஊசிகள் ஒதுக்கப்பட்டன என்பதை சுகாதாரத் திணைக்களம் வெளிப்படுத்த வேண்டும்? 

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு என்ன அடிப்படையில் தடுப்பூசிகள் பகிரப்பட்டன என்பதும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு