SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்..! நேற்று மட்டும் 96 பேருக்கு தொற்று, குழந்தைகள், பெண்களும் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்..! நேற்று மட்டும் 96 பேருக்கு தொற்று, குழந்தைகள், பெண்களும் உள்ளடக்கம்..

யாழ்.மாவட்டத்தில் 96 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்றய தினம் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் மற்றும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் 951 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதது. 

இதன்போது சுமார் 135 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை முடிவுகள்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக முடிவுகள்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் - 13 பேர், மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் - 11 பேர்அவர்களில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேரும், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேரும், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 04 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் - 08 பேர்அவர்களில் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கும், கிளிநொச்சி கொரோனா தடுப்பு மையத்தில் இரண்டு வயதும் ஆறு மாதமும் கொண்ட ஆண் குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் - 06 பேர்அவர்களில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02பேரும், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.