யாழ்.மாவட்ட மக்கள் மிக விரைவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவேண்டும்..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்கள் மிக விரைவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவேண்டும்..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்திற்கு 3 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவேண்டும் என கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மக்கள் அச்சமில்லாமல் தடுப்பூசியை பெறவேண்டும். எனவும் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகளை ஏற்றுவதற்காக 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

உலக நாடுகள் பலவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசி யாழ்ப்பாணத்திலும் வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இரண்டாவது தடுப்பூசியினை ஒரு மாத காலத்தின் பின்னர் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு