யாழ்.பாசையூரில் மீனவர்களுக்கும் - பொலிஸாருக்குமிடையில் முறுகல்..! உடனடியாக சம்ப இடத்திற்குள் நுழைந்த அமைச்சர் டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பாசையூரில் மீனவர்களுக்கும் - பொலிஸாருக்குமிடையில் முறுகல்..! உடனடியாக சம்ப இடத்திற்குள் நுழைந்த அமைச்சர் டக்ளஸ்..

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் மீனவர்கள் சுகாதார நடைமுறைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் விரட்டப்பட்டதுடன், பொலிஸார் மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு  உடனடியாக சென்று மீனவர்களுடன் கலந்துரையாடிதுடன் மேலும் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இதேவேளை சம்பவம் தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கும்போது தாம் அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்காக மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்கிறோம்.

நாம் விற்பனைக்காக மீன்களைக் கொள்வனவு செய்ய வந்தபோது திடீரென வந்த பொலிசார் சுகாதார விதிமுறைகளை மீறி தொழில் நடத்துவதாக எம் மீது தாக்குதல் நடத்தி கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தினர்.

யாழ்.குடாநாட்டு மக்களுக்கு மீன் விநியோகத்தை செய்வதற்காக அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு மீன்களைக் கொள்வனவு செய்ய வந்தோம் எனினும் பொலிசாரின் செயற்பாடு 

தமது தொழில் துறையை பாதிப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். குறித்த பகுதி மீனவர்களை மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கம் மக்களின் சுகாதார பாதுகாப்பில் 

மிகவும் அவதானமாக செய்யப்படுகிறது.தற்போது யாழ்.குடாநாட்டில் covid-19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது மீனவர்களுக்கும் குறித்த பாதுகாப்பு ஊசியை ஏதோ ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் சுகாதார நடைமுறைகளை புரிந்து கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கி தடையின்றி உங்கள் தொழில்துறையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்ததோடு அப்பகுதி சுகாதார பிரிவினரை நேரில் அழைத்து 

கலந்துரையாடியதுடன் பொலிசாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு