யாழ்.பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு..! சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல அம்புலன்ஸ் இல்லையாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு..! சிகிச்சை நிலையங்களுக்கு செல்ல அம்புலன்ஸ் இல்லையாம்..

யாழ்.பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டி இல்லை என கூறப்படுகிறது. 

பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளே பயன்பாட்டிள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் திகதி நெல்லியடியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியொன்று 

வீதியில் நிறுத்தப்பட்ட மற்றொரு வாகனத்துடன் மோதி சிறு விபத்திற்குள்ளாகியிருந்தது. இந்நிலையில் விபத்திற்குள்ளான அம்புலன்ஸ் வண்டி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. 

சிறிய அளவிலான திருத்தங்களுடன் மீண்டும் சேவையிலீடுபடுத்த கூடிய வாகனமென்ற வகையில் அதனை விடுவிக்க நெல்லியடி பொலிஸார் முன்வந்த போதும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகமோ 

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களமோ அக்கறையற்றிருப்பதாக தெரியவருகின்றது. திருத்த வேலைக்கான அனுமதியை வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் அனுமதியை தரவில்லையென சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துவருகின்றது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை போதிய அம்புலன்ஸ் இன்றி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக நோயாளிகளிற்கு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு