நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை யூன் மாதம் இறுதிவரை நீடிக்கப்படும் சாத்தியம்..! தீவிரமாக ஆராய்கிறதாம் அரசு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை யூன் மாதம் இறுதிவரை நீடிக்கப்படும் சாத்தியம்..! தீவிரமாக ஆராய்கிறதாம் அரசு..

நாட்டில் கொரோனா தொற்று பரபலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை யூன் மாத இறுதிவரை நீடிப்பதற்கு அரச உயர்மட்டம் ஆராய்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7ம் திகதிவரை நீடிக்கப்பட்ட பயணத்தடை அதனை தாண்டியும் நடைமுறையில் இருக்கலாம். என அரச உயர்மட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள காலத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

குறைவடைந்துவரும் நிலையில் அரசாங்கம் பயண தடையை நீடித்து முற்காக தொற்று அபாயத்தை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், நடமாடும் வியாபாரம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று

வழங்கும் நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

இதர அத்தியாவசிய சேவைகள் இயங்கும். இதனடிப்படையில் பயணத் தடையை நீடிக்க அரசு ஆலோசித்து வருகின்றது. மேலும் அரச மற்றும் தனியார் வங்கி சேவைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கவைக்கவும் அரசு ஆலோசிக்கிறது. 

இந்நிலையில் பயணத்தடை நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற அறிவிப்பு யூன் 5ம், 6ம் திகதிகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு