SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 19 குழந்தைகளுக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 19 குழந்தைகளுக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று..!

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 19 சிறுவர்கள் நேற்றய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 19 சிறுவர்கள் உட்பட 100

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரதுறையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு முடிவுகளின் படி

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் (10 வயது சிறுவன், 12 வயதுச் சிறுமியும் உள்ளடக்கம்)

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (5 வயதுச் சிறுவனும் உள்ளடக்கம்)

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், (ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, 9, 14 வயதுகளை உடைய சிறுவர்களும் உள்ளடக்கம்)

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு முடிவுகளின் படி

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும்,சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களில்,கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 07, 10, 11, 13, 14 வயதுகளை உடைய சிறுமிகள் 05 பேர், 

8, 12 சிறுவர் இருவரும் உள்ளடங்குகின்றனர். அதேபோல யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 

08, 15 சிறுமிகள் இருவர் 14 சிறுவன் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.சாவகச்சேரியில் அடையாளம் காணப்பட்டவர்களில் 6, 9 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவர், 

12 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.