யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பித்துவைக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ..!

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நாளை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார்.
நாளை காலை 8 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தடுப்பூசி வழங்கும் பணியை ஆரம்பிக்கிறார்.
மாவட்டத்தில் 61 கிராம சேவையாளர் பிரிவுகளில் கொரோனா தடுப்பு ஊசி வழங்கப்படவுள்ள நிலையில் 10 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு
அமைச்சர் நாமல் ராஜபக்ச நேரில் செல்வதுடன் சில வைத்தியசாலைகளையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.