யாழ்.மாவட்டத்தில் நாளை பணிகள் ஆரம்பம்..! அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு முன்னுரிமை..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகும் சுகாதாரதுறை தகவல்கள் தொிவிக்கின்றன.
மாவட்டத்திலுள்ள 16 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கிராம மட்டத்திலிருந்து இந்த தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை அதிகம் பாதிக்கப்படும் கிராமசேவகர் பிரிவுகள் அல்லது பிரதேசங்களுக்கு தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
என ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.