SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் சற்று அதிகரித்துள்ளது..! யாழ்.மாவட்ட செயலர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் சற்று அதிகரித்துள்ளது..! யாழ்.மாவட்ட செயலர் விளக்கம்..

நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மிக மிக அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயண அனுமதி வழங்கப்படவேண்டும். என மாகாண கொவிட் தடுப்பு செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

மாகாண கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டம் இன்றைய தினம் சூம் செயலி மூமாக ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாகாண நிலைமைகள், முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது யாழ்.மாவட்ட நிலைமைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல் வடக்குவைத்தியசாலைகளில் உள்ள நிலைமைகள் தேவைகள், வைத்திய உபகரணங்கள் தேவைப்பாடுகள் அதேபோல ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பாடுகள் மற்றும் வைத்தியசாலைகள் வசதிகள் போன்ற குறைபாடுகள் 

போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனுடைய குறைபாடு நிவர்த்தி செய்வதற்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. குறிப்பாக வட மாகாணத்திலிருந்து அதிகளவான வாகனங்கள் வெளியேறுவதன் காரணத்தினால் 

பயணத் தடை காலத்தின் போது மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது அந்த அறிவுறுத்தல் மிக விரைவில் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதோடு.

அதே நேரத்தில் கடல் மார்க்கமாக எல்லை மீறி பிரவேசிப்பது தொடர்பிலும் இங்கே ஆராயப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

நேற்று இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனையின் படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு ள்ளார்கள் யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை தொற்றுக்குள்ளானோர் 2729 ஆக காணப்படுகின்றது தற்போது வரை 36 மரணங்கள் பதிவாகியுள்ளன.

2526 குடும்பங்களைச் சேர்ந்த 6331 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள் இந்த நிலையிலே யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக நான்கு கிராமங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கின்றோம் அந்த வகையிலே 

தெல்லிப்பழை பிரதேச பிரிவிலே பலாலி வடக்கு அந்தனிபுரம் கிராமம் அதேபோல் தையிட்டி கிராமம் அதேபோல காரைநகரில் ஜே47 கிராம சேவகர் பிரிவு அதே நேரத்தில் தற்போது நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே103 அரசடி கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி 

தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  சுகாதாரப் பகுதியினரிப் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நான்கு பகுதிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே 80 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது அதேபோல் இவ்வாரம் 11 மில்லியன் பெறுமதியான உணவுப்பொருட்களுக்கான நிதி கோரி விண்ணப்பித்து இருக்கின்றோம். 

அத்தியாவசிய பொருட்களை தவிர ஏனைய மிக மிக அத்தியாவசியமான வைத்தியசாலை செல்வோர் விமான நிலையங்களுக்கு செல்வோர் போன்றவர்களுக்கு மாத்திரம் பயணத்தடை அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது.  

ஏனையோருக்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவே பொதுமக்கள் ஏனைய விடயங்கள் தொடர்பில் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டாம் இந்த நிலைமையில் சகல பொதுமக்களும் பொறுமையாக பயண தடையினை அனுசரித்து 

பயணத் தடை காலத்தில் வீடுகளிலிருந்து தேவையற்ற விதத்தில் நடமாடாது செயற்படுதல் வேண்டும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி செயற்படுவது மிக அவசியமாகும். 

இந்த அபாயமான நிலைமையினை கடந்து செல்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் எனவே பொதுமக்கள் இந்த அசௌகரியமான நிலையை அனுசரித்து சற்று பொறுமையாக செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தினை 

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்மேலும் யாழில் கொரோனா இடைக்காலச் சிகிச்சை நிலையங்களை பொறுத்தவரையிலே கோப்பாய் அதேபோன்ற வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையங்கள் கொரோனா இடைக்கால பராமரிப்பு நிலையங்களாக 

 செயற்படுகின்றன கோப்பாயில் 229க்கும் மேற்பட்டோரும் வட்டுக்கோட்டையில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவே அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்கள் சுகாதார பிரிவினரால் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளன 

அத்தோடு வெகுவிரைவில் நாவற்குழி இடைக்கால சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும் என தெரிவித்தார்.