SuperTopAds

நாடு முழுவதிலும் பயணத்தடை 7ம் திகதிவரை தொடரும்..! தளர்வு இல்லை.. இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதிலும் பயணத்தடை 7ம் திகதிவரை தொடரும்..! தளர்வு இல்லை.. இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணத்தடை எதிர்வரும் 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதிகளில் நீக்கப்படாது எனவும்  ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடரும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார். 

அத்தியவசிய பொருட்களை  வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் 31ம் திகதியும், ஜீன் மாதம் 4ம் திகதியும் 

பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் கடந்த முறை தளர்த்தப்பட்டபோது பொதுமக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தற்காலிக தளர்த்தல் நடைமுறையை மீள ஒருபோதும் செய்வதில்லை. என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.