அறையில் அடைபட்டு அழுதேன்!! -தனக்கு ஏற்பட்ட மரண பயம் குறித்த கூறும் நடிகை சம்யுக்தா-
நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரைத் தொடர்ந்து கடந்த மாதம் நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:-
எனக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக உள்ளது.
எனது அறையில் அடைபட்டு அழுதேன். என் அம்மாவை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நம்மில் பலர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. உடற்பயிற்சி பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.