இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்..! நேற்றும் 2572 பேருக்கு தொற்று, 27 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்..! நேற்றும் 2572 பேருக்கு தொற்று, 27 மரணங்கள் பதிவு..

நாட்டில் சுமார் 2572 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 27 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 

இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 174, 849 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் 

உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1325 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு