நாடு முழுவதும் பயணத்தடை 7ம் திகதிவரை நீடிக்குமா..? அரசு எடுத்துள்ள இறுக்கமான தீர்மானம், மக்கள்தான் காரணமாம்..
நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள பயணத்தடை முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் தளர்த்தப்படாது. என அரசு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
அமுலில் இருக்கும் பயண தடை எதிர்வரும் 31ஆம் மற்றும் 4ஆம் திகதி கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தளர்த்தப்பட்ட பயண தடையை அடுத்து
மக்கள் பொருள் கொள்வனவு செய்வதற்காக பெருமளவில் கூடியிருந்தனர். இதனால் தொற்று அபாயம் அதிகரித்து காணப்பட்டதுடன் , மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவ தளபதி கடும் விசனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதி பயண தடையை தளர்த்தினால் மக்கள் பெருமளவில் கூடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமையால் , வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகிக்க கூடிய ஏற்பாடுகளை
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு , அன்றைய தினங்களில் பயண தடை தளர்த்தாது தொடர்ந்து அமுல் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.