முக கவசம் அணியாமல் நடமாடியதற்காக கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்று..! வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..
வவுனியா மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது முக கவசம் அணியாமைக்காக கைது செய்யப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த செவ்வாய் கிழமை பயணத்தடை தளர்த்தப்பட்ட நிலையில் நகரப் பகுதியில் முககவசம் அணியாத நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. வவுனியா நகரம், பசார் வீதி, வைரவபுளியங்குளம்,
குருமன்காடு, ஹொரவப்பொத்தானை வீதி, சந்தை உள்வட்ட வீதி, மன்னார் வீதி என்பவற்றில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கண்காணிப்பின்போது முககவசம் அணியாதோர் கைது செய்யப்பட்டதுடன்
அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வாறு 50 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 16 பேருக்கு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிவரும் நபருக்கு
கொரேனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குடம் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.