யாழ்.நெல்லியடியில் மதுபானசாலை காசாளர், மதுபானசாலை முன் வடை விற்பவர் உட்பட 3 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.நெல்லியடியில் மதுபானசாலை காசளர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
நேற்றய தினம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுபானசாலை காசாளர் மற்றும் மதுபாசாலைக்கு முன்பாக வடைக்கடை உதவியாளருக்கும், கரணவாய் - அண்ணாசிலையடியை சேர்ந்த
ஒருவருக்குமாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. தொற்று உறுதியான சிலருக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.