வெடித்து எரிந்து கொண்டிருக்கும் கப்பல்..! கடலில் மிதந்துவரும் எந்த பொருளையும் தொடவேண்டாம், மக்களுக்கு எச்சரிக்கை..
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்குரமிடப்பட்டிருந்த கப்பலில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 8 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ள நிலையில் கடலில் மிதந்துவரும் எந்தவொரு பொருட்களையும் தொடவேண்டாம். என கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை எரிந்துகொண்டிருக்கின்ற கொள்கலன் கப்பலின் சிதைவுகளிற்கு அருகில் செல்லவேண்டாம் என கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது. கடும் காற்றுகாரணமாக கப்பலில் பரவியுள்ள தீ ஆபத்தானதாக மாறியுள்ளது என கடல்சார் பாதுகாப்பு
அதிகார சபையின் தலைவர் தர்சனி லகந்தபுர தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 6.30 மணியளவில் எட்டுகொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன என தெரிவித்துள்ள அவர் கடலில் விழுந்த கொள்கலன்களிற்குள் என்ன உள்ளது என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக கடலில் மிதந்துவரும் கப்பலின் சிதைவுகளை தொடவேண்டாம்
என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்த 25 பணியாளர்களையும் மீட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதுவரை எண்ணெய் கசிவுகளை அவதானிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.