தீவிர காற்றுடன் கூடிய காலநிலை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை, காரைநகரில் 7 குடும்பங்கள் பாதிப்பு, 4 வீடுகள் சேதம், ஒருவர் காயம்..

யாழ்.மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கைப்பட்டிருக்கின்றனர்.
வங்காள விரிகுடாவில் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம். என வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது.
இதேவேளை யாழ்.காரைநகர் பகுதியில் சுழல் காற்றினால் 7 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் கூறியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதோடு சுய தொழில் முயற்சியாளர் ஒருவரின் கோழி கூடு
கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது .மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடும் காற்றினால் காரணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்
ஏற்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.