கடற்கரையில் பழுதடைந்த நிலையில் சடலம் மீட்பு..! உடற்கூற்று பரிசோதனைக்கு நடவடிக்கை..
மன்னார் - தாழ்வுபாடு கடற்பரையில் பழுதடைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த கடற்கரை பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை குறித்த பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பார்வையிட்டதோடு,
சடலத்தை உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் இவது வரை அடையாளம் காணப்படவில்லை.