யாழ்.மாநகரில் அதியுச்ச கண்காணிப்பு..! தேவையற்று நடமாடுவோர், சுகாதார நடைமுறைகளை மீறுவோர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் அதியுச்ச கண்காணிப்பு..! தேவையற்று நடமாடுவோர், சுகாதார நடைமுறைகளை மீறுவோர் கைது..

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பெருமளவு மக்கள் கூடிய நிலையில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார், இராணுவம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

நாடு முழுவதும் அமுலில் இருந்த பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக மக்களுடைய நடமாட்டம் மற்றும் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்ப்பதற்காக 

யாழ்.நகரின் பிரதான வீதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.யாழ் நகருக்குள் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகணங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள 

அதேவேளை வீதியினால் செல்லுபவர்கள் மறிக்கப்பட்டு அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லுபவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றார்கள்.அத்தோடு யாழ் நகரின் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள 

அதேவேளை பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு