ஜீன் மாதத்தில் நாடு பேராபத்தை சந்திக்கும்..! இறுக்கமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் பாதிப்பை சுகாதார பிரிவால் எதிர்கொள்ள முடியாது..

ஆசிரியர் - Editor I
ஜீன் மாதத்தில் நாடு பேராபத்தை சந்திக்கும்..! இறுக்கமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் பாதிப்பை சுகாதார பிரிவால் எதிர்கொள்ள முடியாது..

சுகாதார பிரிவினால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மோசமான பாதிப்பு ஒன்றை ஜீன் மாதத்தில் நாடு சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

நாட்டினை இரு வாரகாலமேனும் முடக்குவதே நிலைமைகளை கட்டுப்படுத்த ஒரே வழிமுறை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் -19 வைரஸ் தாக்கங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் 

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

தற்போதுள்ள கொவிட் -19 வைஸ் பரவல் நிலைமைகளை அவதானிக்கும் போது ஜூன் மாதம் மிகவும் மோசமானதாக மாறலாம், மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை உருவாக்கும் என்ற நிலையொன்றே இப்போது தென்படுகின்றது.

கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான நாளாந்த தரவுகளை அவதானிக்கும் போது அடுத்த இரண்டு வாரங்களில் அதிகளவில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர். 

இப்போதுள்ள நிலையில் சுகாதார தரப்பினர் மிகவும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது எமக்கு தெரியும். ஆனால் உடனடியாக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். 

இல்லையேல் சுகாதார தரப்பினரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான விதத்தில் நாட்டின் நிலைமைகள் மாறும்.எனவே சுகாதார தரப்பினரும், அரசாங்கமும் மக்களும் நடந்துகொள்ளும் விதத்தில் தான்

அடுத்தகட்டமாக நாட்டின் நிலைமை எவ்வாறு மாறும் என்பது வெளிப்படும். அதுமட்டுமல்ல இப்போது எமக்கிருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால் சுகாதார துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 

கொவிட் -19 வைரஸ் தொற்றுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமையாகும்.எனவே சுகாதார தரப்பினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். 

அப்போதே அடுத்த கட்ட நடவடிக்கைகளை சுகாதார துறையினரை கொண்டு முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு