யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! 68 வயதான முதியவர் வீட்டிலேயே உயிரிழப்பு, மகளுக்கு ஏற்கனவே தொற்று..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியை சேர்ந்த 68 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னர் வீட்டிலேயே உயிரிழந்திருக்கின்றார்.
இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியவரின் மகள் சாவகச்சோி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.