நாளை பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது இதுவே நடைமுறை..! நடந்து செல்லக்கூடிய அருகில் உள்ள கடைக்கு ஒருவர் மட்டும் செல்ல அனுமதி..

ஆசிரியர் - Editor I
நாளை பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது இதுவே நடைமுறை..! நடந்து செல்லக்கூடிய அருகில் உள்ள கடைக்கு ஒருவர் மட்டும் செல்ல அனுமதி..

நாளையும், 31ம் திகதியும், 4ம் திகதியும் பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகளை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வெளிப்படுத்தியிருக்கின்றார். 

பின்வரும் நடைமுறைகளே பின்பற்றப்படவேண்டும். 

01. வாகனங்களில் செல்லாது நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கே செல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

02. பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஆளனியை கொண்டு முன்னெடுக்கவேண்டும்.

 03. ஆடை விற்பனை நிலையங்கள், ஆடம்பர தேவைக்கான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட அனுமதியில்லை என பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். 

04. மரக்கறி, மீன்கடை, இறைச்சிக்கடை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகளை திறப்பதற்கு மட்டுமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதிக்கப்படும். 

இதேவேளை அத்தியாவசிய தேவை என பெறப்படும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்

நாளை (25), மே 31 மற்றும் ஜுன் 4 ஆம் திகதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு