யாழ்.நாவற்குழி - கோவிலாக்கண்டியில் இரு ஆலயங்கள் உடைத்து கொள்ளை..! முழுநேர பயணத்தடை அமுலில் இருந்தபோது..

கோப்பு படம்
யாழ்.மாவட்டத்தில் முழுநேர பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி - கோவிலாக்கண்டி பகுதியில் அடுத்தடுத்து இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெருமளவு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கோவிலாக்கண்டி நாச்சிமார் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. ஆலயத்தின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்த
பெறுமதியான பொருட்கள், உண்டியல் பணம் உள்ளிட்ட சுமார் 4 லட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து,
சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.