யாழ்.ஊரெழு பகுதியில் பேருந்திலிருந்து விழுந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு..!

யாழ்.ஊரெழு பகுதியில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குணசேகர (வயது33) என்ற குறித்த இராணுவ சிப்பாய் வெலிமடையில் உள்ள தனது வீட்டுக்கு
விடுமுறையில் பயணமான நிலையில் யாழ்.ஊரெழு பகுதியில் குறித்த இராணுவ சிப்பாய் பயணித்த பேருந்தின் குறுக்கே நாய் ஒன்று ஓடிய நிலையில்
பேருந்து சாரதி சடுதியாக பிறேக் பிடித்துள்ளார். இதன்போது நிலைதடுமாறி பேருந்திலிருந்து நிலத்தில் விழுந்த குறித்த இராணுவ சிப்பாய்
படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.