நாட்டிலுள்ள பெற்றோர்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..!
நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மனநலன் பாதுகாப்பு விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பிரயோசனமாக நேரத்தை செலவிட வேண்டும்.கொவிட் வைரஸ் பரவலினால் சுமார் 1000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சிறுவர்கள் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல்கள் மென்போக்கானவையாக
காணப்பட்டாலும் தற்போதைய நிலைமையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது என்றார்.