நாட்டில் 5வது கர்ப்பவதி பெண் மரணம்..! தொடரும் கொரோனா மரணங்கள், இன்று 2945 பேருக்கு தொற்று..
நாட்டில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் இதுவரை 5 கர்ப்பவதிகள் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய கர்ப்பிணியொருவரே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இது வரையில் கொவிட் தொற்றால் 5 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1178 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்று ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி வரை நாட்டில் 2945 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.
நாட்டில் நேற்று மாலை வரை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 186 ஆகும்.
இவர்களில் 66 501 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களாவர்.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 26 994 பேர் குணமடைந்துள்ளதோடு , 33 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 1635 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில்
5755 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.