இலங்கையில் இந்திய கரும்பூஞ்சை தொற்று பரவியுள்ளதா..? அது வெறும் வதந்தி என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் இந்திய கரும்பூஞ்சை தொற்று பரவியுள்ளதா..? அது வெறும் வதந்தி என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..

இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் ஊடாக நாடு தயராக வேண்டும். என கூறியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்திய கலாநிதி பிரசாத் கொலம்பேஜ், அம்பாறையில் கரும்பூஞ்சை தொற்று என்பது வதந்தி எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பேஜ், அம்பாறை பகுதியில் இந்திய ‘கருப்பு பூஞ்சை’ தொற்று பதிவாகியுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்பாறை மாவட்டத்தில் பல ஆலோசகர்களுடன் தான் கலந்துரையாடியதாகவும் எனினும் அம்பாறையில் கருப்பு பூஞ்சை பரவுவதை உறுதிப்படுத்த எந்த சம்பவங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.இருப்பினும் நோய் துரதிர்ஷ்டவசமாக பரவினால் அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நமது அண்டை இந்தியாவில் இந்த நோய் பரவி வரும் நிலையில், பூஞ்சை தொற்று இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கொலம்பேஜ் கூறினார். ஆரம்பகால மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பது அறிவுறுத்தலாக இருக்கும் என்றும் ஏனெனில் 

வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால் எதிர்வினையாற்ற தங்களுக்கு நேரம் இல்லை எனவும் தெரிவித்தார். அந்த பூஞ்சை தொற்றுக்கு எதிராக பயன்படுத்த ‘ஆம்போடெரிசின் பி’ போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன என்றும் ஆனால் நம் நாட்டில் அந்த மருந்துகளின் அளவு போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்து அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்க வேண்டும் என்று கொலம்பேஜ் கூறினார் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு