மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்..!

மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்.அச்சுவேலியை சேர்ந்த செல்வக்குமார் சுமேதா என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.
கடந்த 17ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் நேற்ற உயிரிழந்துள்ளார்.
அவருக்கு விசர்நாய் கடித்தமைக்கான அறிகுறிகள் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.