கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கொரோனா தொற்றினால் மரணம்..! மாவட்டத்தில் இன்று இரு கொரோனா மரணங்கள் பதிவு..
கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,
சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவித்திருக்கின்றன.
குறித்த சிறுமியின் பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு..
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுமி நஞ்சருத்தி ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் இரவு உயிரிழந்த நிலையில் இறப்பின் பின் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சடலம் சுகாதார நடைமுறைப்படி நாளை வவுனியாவில் தகனம் செய்யப்படும் என்று மாவட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.