கொழும்பில் பற்றி எரிகிறது கப்பல்!
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படைின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் ஒரு அதிவேகப் படகு ஆகியவை இப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.
தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இழுவைப் படகு ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல், கொழும்பு கடற்கரையில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட போது நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் பிலிப்பினோக்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ரஷ்யர்கள் 25 பேர் இருப்பதாகவும், கப்பலில் இரசாயன கசிவினால் இந்த தீ ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அவசர காலங்களில் நடவடிக்கை எடுக்க கடற்படை சிறப்புப் படைகளும் கடலோர காவல்படையும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.