யாழ்.மாவட்ட சுகாதார அதிகாரிகளின் அசமந்தம்..! கொரோனா தொற்றுக்குள்ளான நிறைமாத கர்ப்பவதி பெண்ணை தடுப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றனராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட சுகாதார அதிகாரிகளின் அசமந்தம்..! கொரோனா தொற்றுக்குள்ளான நிறைமாத கர்ப்பவதி பெண்ணை தடுப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றனராம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பவதி பெண்களை பராமரிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சாவகச்சோி வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் பராமரித்து மகப்பேற்று காலத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடைமுறை அமுலில் இருந்து வருகின்றது. 

இவ்வாறான நிலையில் யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 மாத கர்ப்பவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்றய தினம் இரவு 8.30 மணியளவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் அவரை கொண்டு சென்று வட்டுக்கோட்டை தடுப்பு மையத்தில் இறக்கியுள்ளனர். 

கர்ப்பவதி பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும்போது அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்கவும் மகப்பேற்று காலத்தில் அவர்களுக்கும் சிசுவுக்கும் சிகிச்சையளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பிரிவு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் மாகாண சுகாதார பணிப்பாளர் கூறினார். 

ஆனால் இந்த நடைமுறைகளை மீறி கர்ப்பவதி பெண்ணை தடுப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றமை தொடர்பாகவும், குறித்த பெண்ணை அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு தடுப்பு நிலைய அதிகாரிகளால் இயலாமல் இருந்தமை குறித்து விசனம் தொிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு