யாழ்.பலாலி வடக்கு - அந்தோனிபுரம் முடக்கப்பட காரணம் என்ன? 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில், யாழ்.மாவட்ட செயலர் விளக்கம்..

யாழ்.பலாலி வடக்கில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
சமகால கொரோனா நிலமை தொடர்பாக ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணிபுரம் கிராமத்தினை தனிமைப்படுத்தி இருக்கின்றோம்.
அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள் என மாவட்ட செயலர் கூறியுள்ளார்.