சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றுமாறு நான் கூறவில்லை..! கிளிநொச்சி மாவட்ட செயலர் ரூபாவதி விளக்கம்..

சங்குப்பிட்டி பிள்ளையார் சுருவத்தை அகற்றவேண்டும். என நான் கூறவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
சங்குப்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலயை அகற்றுவதற்கு மாவட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிருக்கும் விளக்கத்திலேயே தாம் அவ்வாறான உத்தரவை வழங்கவில்லை என கூறினார்.
சங்குப்பிட்டியில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் குறித்த இடத்தில் இருந்தது என்றால் முறைப்படி அனுமதி எடுத்து அமைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
குறித்த ஆலயம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு கடிதம் எதுவும் நான் அனுப்பவில்லை குறித்த ஆலயம் முறைப்படி அமைக்கப்பட்டதா? என ஆராயுமாறு கோரியுள்ளேன்.
என அவர் மேலும் தெரிவித்தார்.