SuperTopAds

14 நாட்கள் ஊரடங்கு அல்லது கடுமையான பயண கட்டுப்பாடு விதியுங்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடாப்பிடி..

ஆசிரியர் - Editor I
14 நாட்கள் ஊரடங்கு அல்லது கடுமையான பயண கட்டுப்பாடு விதியுங்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடாப்பிடி..

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, அடையாள அட்டை முறைமை, மற்றும் 3 நாட்களுக்கு பணத்தடை போன்றவற்றினால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சுகாதார கட்டமைப்பு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.அரசாங்க வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் நிரம்பியுள்ளனர். ஐ.சி.யூக்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். 

இதனால் ஏனைய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கலாம். எனவே, தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, 

தேசிய அடையாள அட்டை முறைமை, மூன்று நாட்கள் குறுகிய பயணக்கட்டுப்பாடு போன்றவற்றால் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது. எனவேதான் 14 நாட்களுக்கு கடும் பயணக்கட்டுப்பாடுகளை அல்லது ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு கேட்கின்றோம். 

அதன்பின்னர் நிலைமையை மீளாய்வு செய்து கட்டம், கட்டமாக ஊரடங்கை தளர்த்தலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.