யாழ்.சாவகச்சோியில் கொரோனா தொற்றாளரால் அச்சத்தில் மக்கள்..! வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்பவர்களுடன் பேசுவதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் கொரோனா தொற்றாளரால் அச்சத்தில் மக்கள்..! வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்பவர்களுடன் பேசுவதாக குற்றச்சாட்டு..

யாழ்.சாவகச்சோி நகரில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

குறித்த நபர், ஏனையவர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதனால் அவ்வீதி வழியாக செல்பவர்கள் அச்சம் கொண்டு, 

 வேறு வீதிகள் ஊடாக பயணிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கு றித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

சாவகச்சேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார பிரிவினர், சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு 

வாகனம் இல்லாதமை காரணமாக அவரை, அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர், தனது வீட்டின் முன்பாகவுள்ள வீதியில் நின்று, தனக்கு தெரிந்தவர்களை வழிமறித்து உரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் செயற்படுவதனை அறிந்த பலரும், வீதி வழியாக பயணிப்பதை தவிர்த்து வேறு வீதிகள் ஊடாக பயணித்துள்ளனர். 

ஒரு சிலர், தொற்று கண்டறியப்பட்டமை அறியாது அவருடன் நின்று உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு