யாழ். பலாலி வடக்கு கிராமசேவகர் பிரிவு முடக்கப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..
யாழ். பலாலி வடக்கு கிராமசேவகர் பிரிவில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
நாட்டில் மூன்று மாவட்டங்களில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு , மட்டக்களப்பில் கல்மடு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் மொனராகலையில் 5 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் அவை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.