91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது துறைமுக நகர ஆணைக்குழு சட்டம்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் 91 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் கடந்த 2 நாட்களாக பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின் போது ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மூன்றாவது வாசிப்பின் போது, ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டதால், 91 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு அரச கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்கியதுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்திருந்தன.