சட்டமா அதிபராக பதவியேற்கபோகும் சஞ்சய் ராஜரட்ணம்..! சட்டமா அதிபராக பதவியேற்கும் 3வது தமிழர்..
புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தொிவித்திருக்கின்றது.
சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரட்ணத்தை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.
அவர், இலங்கை சோசலிஷ குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3ஆவது தமிழரும்,
4வது சிறுபான்மையினருமாவார்.