புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400ற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாம்..! பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பில்லை..
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 400ற்கும் மேற்பட்டவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலீஸ் பிரிவுகள்
கடந்த 17.05.21 ஆம் திகதி இரவு 11.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலாக அறிவித்து இன்று 3 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் தனிமைப்படுத்தல் விதியினை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.